குத்தாலம் ஒன்றியத்தில் 2 இடங்களில் புதிய மின்மாற்றிகள் தொடக்கம்

குத்தாலம் ஒன்றியத்தில் 2 இடங்களில்  புதிய மின்மாற்றிகள் தொடக்கம்
X

குத்தாலம் ஒன்றியத்தில் புதிய மின்மாற்றியை நிவேதா எம். முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியத்தில் 2 இடங்களில் புதிய மின்மாற்றிகள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்களும் விவசாயிகளும் அவதிக்கு உள்ளானார்கள் இதனால் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ரூபாய் 11.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டது. இப்பணிகள் முடிந்த நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் முருகப்பா , மங்கை சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!