சீர்காழி அருகே பசுமாட்டை சித்ரவதை செய்த 2 பேர் கைது

சீர்காழி அருகே பசுமாட்டை சித்ரவதை செய்த 2 பேர் கைது
X

சீர்காழி அருகே  சித்ரவதை  செய்யப்பட்ட பசுமாடு

சீர்காழி அருகே பசுமாட்டை சித்ரவதை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள அளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை இவரின் பசு மாடு அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி,பாலசுந்தரம் மன்மதன், சுபாஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான வயலில் மேய்ந்துள்ளது,

இதனால் ஆத்திரமடைந்த ரவி,பாலசுந்தரம் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து பசு மாட்டின் இரண்டு காதுகள் மற்றும் வால் பகுதியை அரிவாளால் வெட்டி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த பசுமாடு ரத்தம் ஒழுகிய படி நின்றுள்ளது.இதனைப் பார்த்த அண்ணாதுரை அதிர்ச்சியடைந்தார். மேலும் இதுதொடர்பாக அண்ணாதுரை வயலின் உரிமையாளர்கள் 4 பேர் மீது கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் வயலின் உரிமையாளர்களான ரவி, பாலசுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மன்மதன், சுபாஷ் உள்ளிட்ட மற்ற இருவரையும் தேடி வருகிறார்கள்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்