மயிலாடுதுறை அருகே குருணை தின்ற 15 ஆடுகள் இறந்தது பற்றி போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை அருகே குருணை தின்ற 15 ஆடுகள் இறந்தது பற்றி போலீஸ் விசாரணை
X

மயிலாடுதுறை அருகே குருணை தின்றதால் இறந்த ஆடுகள்.

மயிலாடுதுறை அருகே குருணை தின்ற 15 ஆடுகள் இறந்தது எப்படி என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட அரிவேளூர் கிராமம் மாரியம்மன்கோவில் பின்புறம் உள்ள திடலில் மேய்ந்துகொண்டிருந்த 5 ஆடுகள் நேற்று உயிரிழந்தது. இந்நிலையில் இன்றும் திடலில் மேய்ந்த ஆடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது.

மீனா என்பவரின் 4 ஆடுகள், பன்னீர்செல்வத்தின் 3 ஆடுகள், மீராவின் 2 ஆடுகள் என பல்வேறு நபர்களின் 15 ஆடுகள் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டின் உரிமையாளர்கள் திடலில் சென்று பார்த்தனர். அப்போது மர்மநபர்கள் அரிசியில் குருணையை கலந்து பாத்திரத்தில் வைத்திருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பெரம்பூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரிசியில் குருணையை கலந்து வைத்த மர்மநபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்தடுத்து நேற்றும் இன்றும் 15 ஆடுகள் உயிரிழந்தது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story
the future of ai in healthcare