மயிலாடுதுறை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊர்திசேவை: மாவட்ட ஆட்சியர் தொடக்கம்
புதிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 கோடி மதிப்பிலான 4 புதிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் அவசரகால சிகிச்சை பெறுவதற்காக 12 அவசரகால உறுதியான 108 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி வருபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனையில் கொண்டு செல்வது, வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வாகன வசதி இன்றி தவிப்பவர்களுக்கு உதவுவது போன்ற சேவை பணிகளை செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இரண்டு அவசர கால ஊர்தி பழுதடைந்தது. இது தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் அடங்கிய நான்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. பழுதடைந்த வாகனங்களுக்கு மாற்றாக 2 வாகனங்களும், மங்கைநல்லூர் திருமுல்லைவாசல் ஆகிய இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இரண்டு 108 ஆம்புலன்ஸ்களும் வழங்கப்பட்டன. புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா கொடியசைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றிட தொடங்கி வைத்தார். வானங்களுக்கு பூஜை செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் மகேந்திரன், மாவட்ட இணை இயக்குனர் சிவக்குமார், மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu