மயிலாடுதுறை: 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை: 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
X
மழைநீரில் மூழ்கிய நெற்பயிரை காட்டும் விவசாயிகள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மேலாநல்லூர் , ராதாநல்லூர் , பொன்வாச நல்லூர் , சேத்தூர் கீழ மருதாநல்லூர், வில்லியநல்லூர், மாப்படுகை, பொன்னூர், பாண்டூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட நெற்பயிர்கள் சுமார் 10000 ஏக்கர் நீரில் மூழ்கி உள்ளன.

மேலும் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் வயல்வெளிகளில் சூழ்ந்துள்ள மழைநீர் வெளியேற முடியாத சூழல் நிலவுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதே மழை நீடித்தால் பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி அழுக கூடிய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் உடனடியாக வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை நீக்கி வயல்வெளிகளில் சூழ்ந்துள்ள மழை நீர் வெளியேறுவதற்கு வழிவகை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அரசு அறிவித்துள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை என்றும் இடுபொருட்கள் தருவதை தவிர்த்து காசோலையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்