மயிலாடுதுறையில் நூறு சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக ஊக்கப்பரிசு

மயிலாடுதுறையில் நூறு சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக  ஊக்கப்பரிசு
X

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நூறு சதவீத இலக்கை அடைவதற்காக  மயிலாடுதுறை கோட்டாட்சியர் ஊக்கப்பரிசு வழங்கினார்

மயிலாடுதுறையில் நூறு சதவீத தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக ஊக்கப்பரிசினை 10 பேருக்கு கோட்டாட்சியர் வழங்கினார்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் இதுவரை முதல் தவணை கொரோனா தடுப்பூசி 97.6 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 58.2 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி 479 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 1170 பேருக்கும் என மொத்தம் 1649 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 100 சதவீதம் தடுப்பூசி இலக்கை அடைவதற்கு நகராட்சி பணியாளர்கள் முழுமுயற்சி எடுத்து வருகின்றனர்.

கடந்தவாரம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முதல் 10 நபர்களை தேர்ந்தெடுத்து மயிலாடுதுறை நகராட்சி சார்பில் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி ஊக்கப்பரிசினை வழங்கினார். இவ்விழாவில் நகராட்சி ஆணையர் நகராட்சி நகர்நல அலுவலர் மலர்மன்னன், வட்டாட்சியர் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil