கொரோனா தடுப்பு பணி - டாக்டர்களுக்கு பாராட்டு விழா

கொரோனா தடுப்பு பணி - டாக்டர்களுக்கு பாராட்டு விழா
X

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கங்கள் சார்பில் மூலிகைத் தோட்டம் திறப்பு விழா மற்றும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, மூலிகை தோட்டத்தை திறந்து வைத்து, மூலிகைச் செடிகளை நட்டு வைத்தனர்.

தொடர்ந்து, மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் அருளாசி கூறினார். இதில், தலைமை டாக்டர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!