/* */

மயிலாடுதுறையில் கோபாலகிருஷ்ண பாரதியின் 34வது ஆண்டு இசை விழா நிறைவு

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் 3 நாட்கள் நடந்த கோபாலகிருஷ்ண பாரதியின் 34வது ஆண்டு இசை விழா நிறைவு பெற்றது.

HIGHLIGHTS

மயிலாடுதுறையில் கோபாலகிருஷ்ண பாரதியின் 34வது ஆண்டு இசை விழா நிறைவு
X

மயிலாடுதுறையில் கோபாலகிருஷ்ண பாரதியின் 34வது ஆண்டு இசை விழா நிறைவு நாளான இன்று கர்நாடக இசை பாடகி சௌம்யாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் பிறந்தவரான கோபாலகிருஷ்ண பாரதி சிவனை மட்டுமே பாடியவர். பன்மொழி புலவர்களுடன் தொடர்பு கொண்டு, அந்தந்த மொழி இசையையும் கற்ற இவர், மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை சந்திக்க திருவையாறு சென்ற இடத்தில் 'சபாபதிக்கு வேறு தெய்வம்" என்ற பாடலை இயற்றியுள்ளார். இவர் 1896ம் ஆண்டு தமது 86வது வயதில் சிவராத்திரியன்று சிவபதம் எய்தினார். இவரது நினைவை போற்றும் வகையில் மயிலாடுதுறையில் வள்ளலார் கோயில் எனப்படும் மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் நடந்து வந்த 3 நாள் இசை விழா நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று நடந்த நிகழ்ச்சியில், பிரபல கர்நாடக இசை பாடகி சௌம்யாவின் இசை ஆராதனை நடந்தது. இதில், 'சபாபதிக்கு வேறு தெய்வம்" எனத் தொடங்கும் கீர்த்தனை உள்ளிட்ட கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய பல்வேறு பாடல்களை சௌம்யா மனமுருக பாடினார். மேலும், திருமெய்ஞானம் ராமநாதன், பாண்டமங்கலம் யுவராஜ் குழுவினரின் நாதஸ்வரம், ரித்விக் ராஜாவின் இன்னிசை பாடல் நிகழ்ச்சி ஆகியனவும் நடைபெற்றது. இதில், ஏராளமான இசை ரசிகர்கள் கலந்துகொண்டு இன்னிசையை கேட்டு ரசித்தனர்.

Updated On: 5 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...