மயிலாடுதுறைக்கு வந்திறங்கிய 2500 டன் அரிசி!

மயிலாடுதுறைக்கு வந்திறங்கிய 2500 டன் அரிசி!
X

மத்திய தொகுப்பு திட்டத்திற்காக மாதாமாதம் மத்திய அரசால் வழங்கப்படும் புழுங்கல் அரிசி மயிலாடுதுறைக்கு சரக்கு ரயிலில் வந்திறங்கியது.

மத்தியஅரசு ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறைந்தவிலையில் அரிசி குறிப்பிட்ட அளவு வழங்கி வருகிறது. மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் அரிசியை மத்திய அரசு நிறுவனமான இந்திய உணவுக்கழகம் மூலம் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த அரிசியை பெற்று மாநிலத்தில் உள்ள ரேஷன்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம் மிரியலகுடா ஊரில் உள்ள இந்திய உணவுக்கழகமானது தமிழ்நாட்டிற்கான மத்திய தொகுப்பு அரிசியில் 2500 டன் புழுங்கல் அரிசியை 41 சரக்குப் பெட்டிகளில் சரக்குரயில் மூலம் மயிலாடுதுறைக்கு அனுப்பி வைத்தது. மயிலாடுதுறைக்கு வந்த அரிசியை, மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் உள்ள இந்திய உணவுக்கழக கிடங்கு அலுவலர்கள் சென்று பார்வையிட்டு 150 லாரிகள் மூலம் அவற்றை ஏற்றி சித்தர்காடு இந்திய உணவுக்கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்து இருப்பு வைத்தனர்.

Tags

Next Story