காவல் நிலையத்தில் வழுக்கி விழுந்ததில் 2 பேருக்கு மாவு கட்டு

காவல் நிலையத்தில் வழுக்கி விழுந்ததில் 2 பேருக்கு மாவு கட்டு
X
சீர்காழி இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் காவல்நிலையத்தில் வழுக்கி விழுந்தால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

நகை கடை உரிமையாளரான தனராஜ் சௌத்ரி வீட்டில் அவரது மனைவி, மகனை கொன்று 15 கிலோ நகைகளை கொள்ளையடித்தவர்களில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மணிஷ், ரமேஷ் பாட்டில் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கருணாராம் என்ற கொள்ளையனை கும்பகோணத்தில் பிடித்தனர்.

மூவரிடமும் வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. அப்போது, மணிஷ், ரமேஷ் காவல்நிலையத்தில் வழுக்கி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது என போலீசார் தெரிவித்தனர். சீர்காழி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story