வீட்டில் பதுக்கிய சாராயம் 1890 லிட்டர் பறிமுதல்

வீட்டின் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1890 லிட்டர் சாராயத்துடன், சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோனேரிராஜபுரம் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் துணை ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கோனேரிராஜபுரம் மாரியம்மன் கோவில் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி கோபு மகன் சூர்யா (24) என்பவர் அதே பகுதியில் உள்ள ராஜதுரை என்ற முதியவர் வீட்டு பின்புறத்தில் 35 லிட்டர் கொள்ளளவுள்ள 54 கேன்களில் 1890 லிட்டர் புதுச்சேரி சாராயம் மண்ணில் புதைத்து பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவலர்கள் சாராய கேன்களை பறிமுதல் செய்து சூர்யாவை கைது செய்து பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து பாலையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai healthcare products