/* */

மயிலாடுதுறைக்கு வந்த தொலுங்கானாபுழுங்கல் அரிசி

தெலங்கானா மாநிலத்தில் இருந்து 1317 மெட்ரிக் டன் புழுங்கல் அரிசி (26500 மூட்டைகள்) இன்று மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.

HIGHLIGHTS

மயிலாடுதுறைக்கு  வந்த  தொலுங்கானாபுழுங்கல் அரிசி
X

மத்திய அரசு இந்திய உணவுக் கழகம் மூலம் மத்திய தொகுப்பில் இருந்து நாடு முழுவதும் அரிசியை அனுப்பி வைக்கிறது. தமிழகத்திற்கு வழங்கும் மத்திய தொகுப்பு திட்டத்தின்கீழ் 3 விதமான திட்டங்களுக்காக கிலோ ஒன்றுக்கு ரூ.2, ரூ.5.65, ரூ.8.35 ஆகிய விலைகளில் குறிப்பிட்ட அளவு அரிசியை வழங்கி வருகிறது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் சுல்தான்பேட்டை என்ற இடத்தில் உள்ள இந்திய உணவுக்கழக கிடங்கிலிருந்து 1317 மெட்ரிக் டன் அரிசியை (26,500 புழுங்கல் அரிசி மூட்டைகள்) அனுப்பி வைக்கப்பட்டது.

அவை 21 வேகன்களில் ரயில்மூலம் மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு இன்று வந்தடைந்தது. இந்த அரிசி மூட்டைகள் தஞ்சாவூர் இந்திய உணவுக்கழக அதிகாரிகள் முன்னிலையில் 69 லாரிகள் மூலம் மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி கிடங்கில் 12 ஆயிரம் டன் புழுங்கல் அரிசி இருப்பில் உள்ளது. தஞ்சாவூர் இந்திய உணவுக் கழக அதிகாரிகள் மேற்பார்வையில், ஓட்டுனர் மற்றும் சுமைதூக்குவோர் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிகளில் ஈடுபட்டனர்.

#தமிழ்நாடு #மயிலாடுதுறை #தெலுங்கானா #மத்திய #தொகுபபு #அரிசி #ரயில் மூலம் #வந்தது. #Mayiladuthurai #Telangana #Central #Collection #Rice #Rail #instanews #tamilnadu #இன்ஸ்டாசெய்தி


Updated On: 17 May 2021 10:56 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...