உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க லிங்க முத்திரை பயிற்சியையும் வழங்கும் யோகா ஆசிரியர்.
கொரோனா தொற்று ஏற்படாமல் சுவாசப் பாதையை சீராக வைத்திருக்கவும், சளித்தொல்லையை நீக்கி நுரையீரலை தூய்மைப் படுத்தவும் யோகப் பயிற்சி. உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க லிங்க முத்திரை பயிற்சியையும் வழங்கும் யோகா ஆசிரியர்.
இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுத்து உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றது. அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதிலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறையில் வருமுன் காக்கும் நடவடிக்கையாக உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், சுவாசப் பாதையை சீராக வைத்திருக்கவும், சளித்தொல்லையை நீக்கி நுரையீரலை தூய்மைப் படுத்தவும் யோகப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் கடந்த 40 ஆண்டுகளாக இலவசமாக யோகப் பயிற்சி அளித்துவரும் டிஎஸ்ஆர்.கணேசன் என்பவர் யோகப் பயிற்சியில் நுரையீரல் தொற்றை அகற்றும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பயிற்சி அளித்து வருகிறார். சர்வங்காசனம், மச்சானம், வஜ்ர மச்சானம், உஷ்டாசனம், உஜ்யயி பிராணயாமம், பிராமரி பிராணயாமம், மூச்சுப்பயிற்சி, நாடிசுத்தி ஆகிய பயிற்சிகளை அளித்து வருகிறார். மேலும், ஐஐடி பரிந்துரையின்படி உடலில் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும் வகையில் லிங்க முத்திரை பயிற்சியும் தினமும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவரிடம் யோகா பயின்று வருபவர்களுக்கு வாரம் ஒருமுறை கபசுரக் குடிநீரையும் வழங்கி முற்றிலும் கரோனாவுக்கு எதிரான இயக்கத்தையே இவர் ஏற்படுத்தியுள்ளார். இவரிடம் வயது முதிர்ந்தவர்கள் முதல் இளம்பெண்கள் வரை பல்வேறு வயதினர் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu