மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை மழை-

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடை மழை-
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பரவலாக கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மயிலாடுதுறை, மணல்மேடு, மங்கைநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.இதேபோல் செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. வெயிலின் போதே மழையும் பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai powered agriculture