திமுக நிர்வாகிகளுடன் பூம்புகார் வேட்பாளர் சந்திப்பு
![திமுக நிர்வாகிகளுடன் பூம்புகார் வேட்பாளர் சந்திப்பு திமுக நிர்வாகிகளுடன் பூம்புகார் வேட்பாளர் சந்திப்பு](https://www.nativenews.in/h-upload/2021/03/19/985220-screenshot20210319093556.webp)
பூம்புகார் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகன் பூம்புகார் தொகுதி செம்பை தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகளை சந்தித்து மரியாதை செலுத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பை தெற்கு ஒன்றியத்தில் இலுப்பூர், எடுத்துக்கட்டி, திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுசேரி உள்ளிட்ட ஊராட்சிகளில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் தொகுதி சட்டமன்ற வேட்பாளருமான நிவேதா முருகன் திமுக நிர்வாகிகளை சந்தித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக திமுக வேட்பாளர் நிவேதா முருகன் இலுப்பூர் ஊராட்சியில் திமுக கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வேட்பாளரான நிவேதா முருகனுக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில், செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அப்துல்மாலிக், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ரவி, முன்னாள் எம்எல்ஏ., எம்எம் சித்திக், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu