தாய்,மகள் தற்கொலை வழக்கு-கணவர், மாமியார் அதிரடி கைது

தாய்,மகள் தற்கொலை வழக்கு-கணவர், மாமியார் அதிரடி கைது
X

மயிலாடுதுறை அருகே வரதட்சணை கொடுமையால் 1 வயது குழந்தையைக் கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்த வழக்கில் கணவர், மாமியார் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறையை சேர்ந்தவர் ரயில்வே தற்காலிக பணியாளர் பார்த்திபன்(30). இவர் நரசிங்கன்பேட்டையை சேர்ந்த செல்லதுரை என்பவரது மகள் செல்வக்குமாரி(24) யைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் 25 பவுன் நகை வேண்டும் என்று கணவரும் மாமியாரும் சேர்ந்து செல்வக்குமாரியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. தனது மாமியாரின் கொடுமை குறித்து செல்வக்குமாரி தன் சகோதரர் செல்வராஜிடம் செல்போன் மூலம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் பார்த்திபன் வெளியூருக்குச் சென்றுள்ளார். அதே நேரத்தில் மாமியார் தனலட்சுமி நகை கேட்டு தொடர் வற்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மனம் வெறுத்து போன செல்வக்குமாரி தன் ஒன்றேகால் வயது குழந்தையை தலையணையால் அமுக்கி கொன்று விட்டு அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மருத்துவமனையில் வைக்கப்பட்ட தாய், மகள் உடல்களை இன்று காலை மருத்துவமனைக்கு சென்று ஆர்டிஓ பாலாஜி பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்நிலையில் செல்வக்குமாரியை தற்கொலைக்குத் தூண்டியதாக குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாமியார் தனலட்சுமி(48), கணவர் பார்த்திபன்(30) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!