ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
X

மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவில் பழைமைவாய்ந்த ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான விழா கடந்த புதன்கிழமை முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கும்பாபிஷேக தினமான இன்று காலை 2 கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, மகா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க விமான கும்பாபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று கும்பாபிஷேக விழாவை கண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!