கேஸ் சிலிண்டர்களில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள்

கேஸ் சிலிண்டர்களில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள்
X

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் கேஸ்சிலிண்டர்களில் வாக்களிப்பது எனது உரிமை எனது கடமை என்ற வாசகம் கொண்ட துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டு விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வரும் ஏப்ரல் 6ம்தேதி தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட தரங்கம்பாடி தாலுகாவில் கேஸ் சிலிண்டர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி தாலுக்காவில் வழங்கப்படும் கேஸ்சிலிண்டர்களில் வாக்களிப்பது எனது உரிமை, எனது கடமை என்ற வாசகம் பொருந்திய துண்டு பிரசுரங்கள் சிலிண்டர்களில் ஒட்டி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, சிலிண்டர் குடோன்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தனி வருவாய் அலுவலர் ஜோசப் மரியராஜ், வட்ட பொறியாளர் ஐயப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!