தருமையாதீனத்திடம் ஆசி பெற்ற ரோட்டரி விழிப்புணர்வு குழு

தருமையாதீனத்திடம் ஆசி பெற்ற ரோட்டரி விழிப்புணர்வு குழு
X

சென்னை மிராக்ஸி ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த சிவபாலதேவி, இராஜேந்திரன், சுசித்ரா இராஜேஸ்வரி, கார்த்திகேயன் ஆகியோர் குடகு மலையில் தொடங்கி பூம்புகார் வரை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, நதிநீர் பாதுகாப்பு, நீர் சிக்கனம், மரம் வளர்ப்பு இவற்றை வலியுறுத்தி பேரணியை மேற்கொண்டனர். ஒவ்வொரு ஊரிலும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வரவேற்று பேரணியில் கலந்துகொண்டனர்.

இக்குழுவினர் ரோட்டரியால் வளர்க்கப்படும் குருங்காடுகளைப் பார்வையிட்டனர். காவிரியை மேம்படுத்துவதற்கான திட்ட அறிக்கைத் தயாரித்து சர்வதேச ரோட்டரி சங்கத்திடம் அளிக்க உள்ளனர். மயிலாடுதுறைக்கு வருகைபுரிந்த இக்குழுவினர் மூவலூர், தருமபுரம், பரசலூர் போன்ற இடங்களில் வளர்க்கப்படும் குறுங்காடுகளை பார்வையிட்டனர்.

இக்குழுவினர் தருமை ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றனர். மயிலாடுதுறை ரோட்டரி சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட நீர் சிக்கனம் விழிப்புணர்வு பதாகையை குருமகாசந்நிதானம் வெளியிட விழிப்புணர்வு குழுவினர் பெற்றுக் கொண்டனர். உடன் உதவி ஆளுநர் T. இரவிக்குமார், கல்லூரிச் செயலர் முனைவர் இரா.செல்வநாயகம், பல்வேறு ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் சி.சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி உதவியாளர் திரு இரா.சிவராமன் நன்றி கூறினார். அனைவருக்கும் 'மரம் ஒரு வரம்' என்னும் நூலினை ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் வழங்கியருளினார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!