மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம்

மயிலாடுதுறையில் தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம்
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1073 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. சீர்காழி தனிதொகுதியாகவும், மற்றவை பொதுதொகுதிகளாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக கூடுதல் வாக்குசாவடி மையங்களை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் 7 லட்சத்து 72 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்டத்தில் 1073 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 42 மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தோ-திபோத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 91 பேர் மயிலாடுதுறை மாவட்ட போலீசார், ஊர்காவல்படை தன்னார்வலர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாதா தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்