மத்தியஅரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்தியஅரசை கண்டித்து விவசாயிகள்  ஆர்ப்பாட்டம்
X

வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்தும், அதற்கு தீர்வு காணவில்லை என மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மத்தியஅரசு நடைமுறைபடுத்தியுள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை நிறைவு செய்தும், அதற்கு தீர்வு காணாத மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காவிரி டெல்டா பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் குரு கோபி கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!