பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம்-சீர்காழியில் பரபரப்பு

பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம்-சீர்காழியில்  பரபரப்பு
X

சீர்காழியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, விபூதி, குங்குமமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் வாசலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து,விபூதி, குங்குமம் வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிலையின் இரும்பு கூண்டு கதவு திறக்கப்பட்டு சிலைக்கு மாலை அணிவித்து குங்குமம் வைத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலை முன் இருக்கும் சிசிடிவி கேமரா பழுதானதால் சீர்காழி போலீசார் மர்ம நபர் யார் என தெரியாமல் தவித்து வருகின்றனர். இந்நிகழ்வுக்கு பெரியார் திராவிட கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி