மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு
X

மயிலாடுதுறை மாவட்டத்தில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி பெய்வதால் காலை வேலைக்கு செல்வோர் அவதியடைந்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, மங்கநல்லூர், குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோவில், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 7.30 மணியை தாண்டியும் கடுமையான மூடுபனி இருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே சென்றன. சாரல் மழை போல் கடுமையான பனியால் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு இருந்ததால் காலை வேலைக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகினர். வழக்கமாக மார்கழி மாதத்தில் செய்யும் பனி தற்போது மாசி மாதம் பாதி தேதியை கடந்தும் பெய்து வருகிறது.

பருவ மழை பருவம் தப்பி பெய்த நிலையில் தற்போது பனியும் பருவம் மாறி பொழிகிறது. ஏற்கனவே பெரும் மழையால் சம்பா பயிர்கள் பாதித்துள்ளது. தற்போது இந்த பனியால் மீதமுள்ள அறுவடை பணியும், அறுவடை செய்து விற்பனைக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!