வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்

வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
X
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பாக இன்று முதல் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் தலைமையில் பணிகளைப் புறக்கணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!