வேளாண் சட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
X

மயிலாடுதுறையில் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினார்கள்.

மயிலாடுதுறை அருகே மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய அரசு நடைமுறைபடுத்தியுள்ள வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். போராட்டத்திற்கு பிறகு வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியை விட்டு வெளியேறினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்