கொத்தடிமை முறையை ஒழிக்க உறுதிமொழி

கொத்தடிமை முறையை ஒழிக்க உறுதிமொழி
X
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து அரசுதுறை அதிகாரிகளும் கொத்தடிமைகள் இல்லா மாவட்டத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்றனர்.

பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தொழிலாளர் நலத்துறையின் சார்பாக உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் வேணு, டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளர்கள் சிங்காரவேலு- கொப்பெருந்தேவி, உள்ளிட்ட வருவாய்த்துறை, காவல்துறைதுறை, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், குழந்தை சேவை அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத் தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால் கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த உறுதிமொழியை ஏற்று தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும், கொத்தடிமை தொழிலாளர் மீட்பு முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் கொத்தடிமை இல்லா தமிழகத்தை மாற்றுவதற்கு சிறப்பாக செயல்படுவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் செங்கல் சூளை அரிசி ஆலை தொழிற்சாலைகள் மற்றும் ஆடு மாடு வளர்ப்பு போன்ற இடங்களில் கொத்தடிமைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story