சாராயம் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்

சாராயம் கடத்திய  நபரை போலீசார் கைது செய்தனர்
X
1100 லிட்டர் சாராயம் காரில் கடத்தி வந்த நபர் பாலையூர் போலீசாரால் கைது .

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரத்திற்கு உட்பட்ட ஸ்ரீகண்டபுரத்தில், பாண்டி சாராயம் காரில் கடத்தி வருவதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன் பேரில் பாலையூர் போலீசார் பாலையூர் சரகத்திற்கு உட்பட்ட ஸ்ரீ கண்டபுரம் கடைத்தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வழுவூர் தோப்பு தெருவை சேர்ந்த ராம்கி என்பவர் காரில் சுமார் 1100 லிட்டர் கொண்ட 11000 பாக்கெட்டுகள் பாண்டி சாராயம் கடத்திச் சென்றுள்ளார். அவரது கார் மற்றும் சாராய பாக்கெட்டுகளை பாலையூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் காரில் கடத்தி வந்த ராம்கி என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story