பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பருவம் தவறி பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சராக மண்டல மேலாளர் ரனஞ்சய்சிங் தலைமையில் மத்திய மீனவளத்துறை மேம்பாட்டு ஆணையர் பவுல்பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய மத்திய குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் லலிதா ஆகியோர் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை 1,324 மில்லிமீட்டர் கனமழை பெய்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் சாகுபடி செய்யப்பட்டிருந்த 68,266 ஹெக்டேர் சம்பா பயிர்களில் 15,546 நிலப்பரப்பில் சாகுபடி செய்திருந்த 66,087 விவசாயிகள் இந்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாடம் பகுதியில் பாதிக்கப்பட்ட வயல்களை பார்வையிட்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து தரங்கம்பாடி தாலுக்காவில் கே.டி.பாளையம் கிராமத்தில் நிலக்கடலை பாதிப்பையும் மற்றும் அன்னப்பன்பேட்டை கிராமத்தில் நெற்பயிர் பாதிப்புகளையும் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu