மத்திய அரசின் முடிவை கண்டித்து மருத்துவர்கள் பேரணி

மத்திய அரசின் முடிவை கண்டித்து மருத்துவர்கள் பேரணி
X

ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து மருத்துவ சங்கத்தினர் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும், கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மோட்டார் சைக்கிள் பேரணியும் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை தலைவர் டாக்டர்.பாரதிதாசன் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. மயிலாடுதுறை அரசு மருத்துவ மனையில் இருந்து புறப்பட்ட பேரணி வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, எருக்கூர் வழியாக சென்று சிதம்பரத்தில் நிறைவடைந்தது. இந்திய மருத்துவக் கழக மருத்துவர்களின் போராட்டத்திற்கு, இந்திய பல் மருத்துவ சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கும் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!