பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு -போலீஸ் விசாரணை

பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு -போலீஸ் விசாரணை
X

மயிலாடுதுறை மாவட்டம் திருநின்றியூரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் சுமார் 5 சவரன் தாலி செயின் பறிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தொழுதூர் கிராமத்தை சேர்ந்த கவிதா என்பவர் இருசக்கர வாகனத்தில் நேற்று மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி வரும் பொழுது திருநின்றியூர் வெட்டாறு பாலத்தில் பதுங்கியிருந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த சுமார் 5 பவுன் செயினை அறுத்து சென்றனர். இதுகுறித்து கவிதா, வைத்தீஸ்வரன்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture