சீர்காழி அருகே பொங்கல் போட்டி

சீர்காழி அருகே பொங்கல் போட்டி
X
சிறுவர், சிறுமிகளுக்கான சைக்கிள் போட்டி. ஏராளமான சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில், கிராம நண்பர்கள் சார்பாக 12 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. இதில் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகள் என போட்டி தனித்தனியாக நடத்தப்பட்டது. சட்டநாதபுரத்தில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேட்டி சீர்காழி புறவழிச்சாலை, செங்கமேடு வழியாக மீண்டும் சட்டநாதபுரத்தில் முடிவடைந்தது. இதில் முதல் மூன்று இடம் பிடித்த சிறுவர், சிறுமியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!