சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது

சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது
X
சீர்காழியில் சூரைக்காற்றால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது, கிராம புற சாலை துண்டிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரண்டு நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளான நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட சூறாவளி காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்ததும், கிளைகள் முறிந்தும் சாலையின் நடுவே விழுந்துள்ளது, இதனால் சீர்காழி அருகே சேந்தங்குடி, ஆண்டிக்கோட்டம், புளிச்சக்காடு, ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலை முழுவதும் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் கிராமத்திற்கு உள்ளே பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விழுந்த மரங்களை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அகற்றி சாலையை சீரமைத்து தர அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story