பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளிகள் திறப்பது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது, பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

தமிழக அரசின் அறிவிப்பின்படி வரும் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் அரசு பள்ளி ஒன்றில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டது. இதில் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். இதேபோல் மணல்மேடு, காளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளியில் அளித்த படிவத்தை பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். தமிழக அரசின் அறிவிப்பின்படி வரும் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் திருமங்கலம் அரசு பள்ளி ஒன்றில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு படிவத்தில் கையெழுத்து பெறப்பட்டது. இதில் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். இதேபோல் மணல்மேடு, காளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்து கொண்டு பள்ளியில் அளித்த படிவத்தை பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!