ஸ்டாலினுக்கு ஏழைகள் கஷ்டம் தெரியாது - ஓ.எஸ்.மணியன்

ஸ்டாலினுக்கு ஏழைகள் கஷ்டம் தெரியாது -   ஓ.எஸ்.மணியன்
X

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஏழைகளின் சங்கடங்கள் தெரியாது என அமைச்சர் ஓஎஸ் மணியன் கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி ஊராட்சியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறப்புவிழா மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று, அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் கோமானின் மகன். அவருக்கு ஏழைகளின் சங்கடங்கள் தெரியாது. கிராமப்புற மக்களின் தேவைகள் அவருக்கு புரியாது. எனவே தான் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ள அற்புதத் திட்டமான அம்மா மினி கிளினிக் திட்டத்தை ஏளனப்படுத்துகிறார். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அளித்துதான் திமுக வெற்றி பெற்றது. ஆனால் அதன்பின் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தற்போது கிராமசபைக் கூட்டங்களில் மக்களிடம் மனுக்களை பெறுகிறார். அதனை எங்கு கொண்டு கொடுப்பார் ?. திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை நம்ப வைத்து ஏமாற்றி வாக்குகளை பறிக்க திட்டமிட்டுகிறது என்றார். நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்