மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ் பறிமுதல்

மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ் பறிமுதல்
X

மயிலாடுதுறையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறையில் முறையான ஆவணமின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளி பஸ், வேன் மற்றும் ஆட்டோக்களை ஆர்டிஒ பறிமுதல் செய்தார்.

கடந்த 1ம் தேதி பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் வேன்(மேக்சிகேப்) வாகனம் விபத்துக்குள்ளாகி 28 மாணவர்கள் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் முறையான அனுமதி இல்லாததால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் முறையான அனுமதி இல்லாமல் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் உத்தரவிட்டதன்பேரில், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் தனியார் கல்வி நிறுவன வாகனங்கள், தனியார் மேக்ஸி கேப் வேன்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு முறையான ஆவணங்கள் உள்ளனவா என கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வாகன சோதனையில் 2 தனியார் பள்ளி பஸ்கள், 5 மேக்ஸி கேப் வாகனங்கள், 5 ஆட்டோக்கள் தகுதி சான்று புதுப்பிக்காமலும், அனுமதிச்சீட்டு இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இன்சூரன்ஸ் இல்லாமலும், தகுதியான ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் இயக்கியதால் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டன.

Tags

Next Story