முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது: மயிலாடுதுறையில் அதிமுக ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது:   மயிலாடுதுறையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
X

மயிலாடுதுறையில் நடைபெற்ற அதிமுகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த திமுக அரசின் நடவடிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதி, ராதாகிருஷ்ணன், சக்தி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதிமுகவினரின் இந்த ஆர்ப்பாட்டத்தால் மயிலாடுதுறை நாகை திருவாரூர் மார்க்கத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. போராட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!