/* */

மார்ச் மாதத்தில் குரூப் 4 முடிவுகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

மார்ச் மாதத்தில் குரூப் 4 முடிவுகள் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி
X

கடந்த ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு 7 மாதங்கள் முடிந்த நிலையில் முடிவுகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. பிப்ரவரி மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டும் என்று அறிவிக்கப்படிருந்த நிலையில் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. தற்போது இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அமைப்பின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள் தேர்வு IV-ற்கான எழுத்துத் தேர்வினை தேர்வாணையம் கடந்த 24.07.2022 அன்று நடத்தியது.

இத்தேர்விற்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 விண்ணப்பதாரர்கள் தேர்வினில் பங்கேற்றனர். இந்திய அளவில் ஒப்பிடும்போது அனைத்து தேர்வாணையங்களாலும் நடத்தப்பெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகமான விண்ணப்பதாரர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வாணையத்தின் கடுமந்தணத்தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டும், எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாட்களின் இரு பகுதிகளையும் தனித்தனியே இருமுறை ஸ்கேன் செய்து, அதன் பின்னர் விண்ணப்பதாரர்கள் விடைத்தாள்களில் செய்துள்ள பிழைகளை கணினி மூலம் அடையாளங்காணப்பட்டு அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகப்படியான கால அவகாசம் தேவைப்படுகிறது. விடைத்தாட்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி, தேர்வர்களால் செய்யப்படும் ஏறக்குறைய 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது.

கடந்த 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சுமார் 10 முதல் 17.5 லட்சம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் 2022ல் நடைபெற்ற தேர்வில் ஏறத்தாழ லட்சத்திற்கும் கூடுதலான தேர்வர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதும், இம்முறை விடைத்தாட்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்து, பிழைகள் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதன்படி மொத்தமாக ஸ்கேன் செய்ய வேண்டிய ஓஎம்ஆர் விடைத்தாட்களின் எண்ணிக்கை 36 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ளது. கடந்த தேர்வுகளை ஒப்பிடும்போது ஏறக்குறைய மும்மடங்கு கூடுதலான வேலையை உள்ளடக்கியதாக உள்ளது.

மேற்கண்ட காரணங்களினாலும், இதே காலத்தில் தேர்வாணையம் பல்வேறு பணித்தேர்வுகளையும் மற்றும் துறைத்தேர்வுகளையும் தொடர்ந்து நடத்தி முடிவுகளை வெளியிட்டுவருவதாலும், தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இடையறாது பணியாற்றி இத்தேர்வின் அனைத்து மிக முக்கிய பணிகளையும் மிகுந்த கவனத்துடன் முடித்து, எவ்வித தவறுக்கும் இடம்தராமல் இத்தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஆகையால், தேர்வர்கள் இத்தேர்வு குறித்து வெளிவரும் அடிப்படை ஆதாரமில்லாத தகவல்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 14 Feb 2023 4:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  2. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  3. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  4. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  5. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  6. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  8. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  9. திருவள்ளூர்
    தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டு!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு