நள்ளிரவில் உருவானது மாண்டஸ்.. எத்தனை கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் தெரியுமா?

நள்ளிரவில் உருவானது மாண்டஸ்.. எத்தனை கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் தெரியுமா?
X

வானிலை ஆய்வு மைய படம்.

வங்கக்கடலில் நேற்று நள்ளிரவில் மாண்டஸ் புயல் உருவாகி சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

வங்கக்கடலில் நேற்று நள்ளிரவில் மாண்டஸ் புயல் உருவாகி சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இதனைத்தொடர்ந்து கடந்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது , காரைக்காலுக்கு தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும் , சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி வரும். நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாண்டஸ் புயல் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்தெரிவித்துள்ளது.

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை வரை பெய்யவாய்ப்புள்ளதாகவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாளை 9ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரியில் அதி கனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 10ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!