/* */

கனவு இல்லத்தை அமைக்க மனையடி சாஸ்திரம்

Manaiyadi Shastra Tamil Panchangam-வீட்டின் அகல நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்? எந்த அகல நீளத்தில் வீட்டின் அறைகள் இருந்தால் என்ன பலன்கள் உண்டாகும் என்பதை விளக்குவதே மனையடி சாஸ்திரம்

HIGHLIGHTS

கனவு இல்லத்தை அமைக்க மனையடி சாஸ்திரம்
X

Manaiyadi Shastra Tamil Panchangam-பொதுவாக மனையடி சாஸ்திரம் என்பது ஒரு மனையில் கட்டப்படும் வீட்டின் அகல நீளம் எவ்வளவு இருக்க வேண்டும்? எந்த அகல நீளத்தில் வீட்டின் அறைகள் இருந்தால் என்ன பலன்கள் உண்டாகும்? வீட்டில் சுவர்கள் எவ்வளவு உயரம் இருக்க வேண்டும்? இப்படி வீட்டின் அளவை குறித்து முழுமையாக விளக்குவதே மனையடி சாஸ்திரம்.

இங்கு நாம் 6 அடியில் தொடங்கி 100 அடி வரை வீடு மற்றும் அதன் அறைகளின் அளவு இருந்தால் அதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றியும், வீட்டின் சுவர் எவ்வளவு உயரம் இருந்தால் என்ன பலன் என்பது பற்றியும் விரிவாக பார்ப்போம்.


வீட்டின் சுற்று சுவர் அல்லது வீட்டின் மாடி சுவர்

வீட்டின் சுற்று சுவர் அல்லது வீட்டின் மாடி சுவர் தென்மேற்கு ஒரு அங்குலமாவது ஆவது உயர்ந்த இருக்க வேண்டும். அதை விட சற்று குறைவாக தென் கிழக்கு முனை அதை விட குறைவாக வட மேற்கு முனை சுவர் அதை விட குறைவாக வட கிழக்கு சுவர் முனை இருக்க வேண்டும்.

பூஜை அறை அமைக்க மனையடி சாஸ்திரம்

வீட்டில் வட கிழக்கு பகுதியில் இருப்பது நல்லது. சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி பார்க்கும் படி வைக்க வேண்டும். இந்த திசையில் சேமித்து வைக்கக் கூடிய அறை இருக்கலாம். இந்த பகுதியில் சமையல் அறை, கழிப்பறை, இருப்பது நல்லதன்று .

சாமி புகைப்படங்களை வடக்கு பார்த்தும் வைக்கலாம். இறந்தவர்கள் புகைப்படத்தினை தெற்கு பார்த்து மாட்ட வேண்டும். பூஜையறை வாஸ்து குறிப்புகள் பற்றி முழுதாக தெரிந்து கொள்ளவும்.

துளசி மாடம் அமைக்க

இப்போது எந்த வீடுகளிலும் துளசி மாடம் அமைப்பதில்லை. பெரும்பாலான பழைய வீடுகளில் துளசி மாடம் வைத்திருந்தனர். மருத்துவ குணம் நிறைந்த துளசி மாடம் வீட்டில் இருந்தால் நேர்மறை ஆற்றல்கள் ஈர்க்க வல்லது. அதோடு துளசி செடி காற்றை தூய்மைப் படுத்தும் ஆற்றல் கொண்டது.

இது வீட்டில் முன் இருப்பது நல்லது. குறிப்பாக கிழக்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது.

விளக்கு ஏற்றும் திசை

வீட்டில் விளக்கு ஏற்றுவது வெறும் பூஜைக்காகவோ, வெளிச்சத்திற்காக மட்டும் கிடையாது. விளக்கு என்பது வீட்டின் எதிர்மறை ஆற்றலை நீக்கி மங்களத்தைக் கொண்டு வரக்கூடியது.

வீட்டில் எப்போதும் ஒரு விளக்க்காக ஏற்றாமல் இரண்டு விளக்காக ஏற்றுவது நல்லது. அதே போல் வீட்டின் துளசி மாடத்தில் விளக்கேற்றுவது நல்ல பலனை தரும். விளக்குகள் கிழக்கு நோக்கி ஏற்றுவது நல்லது. தெற்கு நோக்கி ஏற்றுதல் ஆகாது.

படுக்கை அறை

வீட்டின் முக்கிய அறைகளில் ஒன்று படுக்கை அறை. ஓய்வு என்பது ஒருவரின் உடல்நிலை மற்றும் மனநிலைக்கு முக்கியமானது. தூக்கம், ஓய்வு எடுக்கக் கூடிய படுக்கை அறை வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது மிகவும் நல்லது.

படுக்கை அறையில் வடக்கு பக்கம் பார்த்து பீரோ பண சேமிக்கும் அலமாரி வைக்க வேண்டும்.

இரண்டு படுக்கையறை அமைக்க விரும்புபவர்கள் இரண்டாவது அறையாக வடகிழக்கு பகுதியில் அமைக்கலாம். இளம் தம்பதியினர் தென்மேற்கு பகுதியிலும் வயதானவர்கள் வடகிழக்கு அறையிலும் தங்குவது நல்லது.

தூங்கும் திசை

அதே போல் நாம் படுத்து தூங்கும் போது தெற்கிலும் கிழக்கிலும் தலை வைத்து படுப்பது மிகவும் நன்மை. வடக்கில் தலை வைத்து படுக்கவே கூடாது.

சமையலறை அமைக்க

தென் கிழக்கு பகுதி அக்னி மூலை எனவே வீட்டின் தென் கிழக்கு பகுதியில் சமையல் அறை அமைவதும், கிழக்கு நோக்கி நின்று சமைப்பது மிகவும் நல்ல அமைப்பாகும். அவ்வாறு அமைக்க இயலாதவர்கள் இரண்டாவது தேர்வாக வடமேற்கு திசையில் சமையலறை அமைக்கலாம்.

பூஜை அறைக்கு அருகில் இருக்கலாம். ஆனால் கழிப்பறைக்கு அருகில் சமையல் அறை மற்றும் பூஜை அறை இருப்பது நல்லதல்ல. சமையலறை தொட்டி தென்கிழக்கில் இருக்க வேண்டும். வடமேற்கு திசையில் அமைப்பது அடுத்த தேர்வு

போர் மற்றும் கிணறு அமைக்க

போர், கிணறு தோண்டுவது வெறும் நீர் தேவைக்காக மட்டுமில்லாமல் வீட்டின் சௌபாக்கியங்கள் அதிகரிக்கவும் தோண்டினார்கள். வீட்டிற்காக போர்வெல், கிணறு தோண்டும் போது வீட்டின் வட கிழக்கு பகுதியில் தோண்டுவது நல்லது. வீட்டின் நடுவில் அமைப்பது எதிர்மறை பலன்களைத் தரும்.

மேல்நிலை நீர்தொட்டி தென்மேற்கு பகுதியில் அதிக உயரத்துடன் இருக்க வேண்டும்.

குளியலறை அமைக்க

குளியலறை தென்மேற்கு பகுதியில் இருக்க கூடாது மற்ற திசைகளில் அமைக்கலாம். அதேபோல கழிவுத்தொட்டியும் தென்மேற்கில் அமைக்க கூடாது நோய் உண்டாகும்.

படிக்கட்டுகள் அமைக்க

வீட்டின் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும். படிக்கட்டில் ஏறுவது கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி சென்றடைவதாக அல்லது வடக்கிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி ஏறுவதாக இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டு கட்டக்கூடாது.

மரங்கள் அமைக்க

வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் மரங்கள் வளர்ப்பது நல்லது. தெற்கு பகுதியில் மரங்கள் வளர்க்க மிகவும் உன்னதமானது. மரக் கிளைகளை வீட்டின் மேல் செல்வது கூடாது.


மனையடி சாஸ்திரம் பொது தகவல்கள்

மனையடி சாஸ்திரம் பற்றிய பொது தகவல்கள் – எந்தெந்த திசைகளில் எவை இருந்தால் நல்லது என்று பொதுவான தகவலாக பார்ப்போம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வீடு வாங்குபவரின் 4 பாவத்தை பொறுத்தே துல்லியமாக சொல்ல முடியும்.

கிழக்கு – குடிநீர் தொட்டி

தென்கிழக்கு – சமையலறை

தெற்கு – படிக்கும் அறை

தென் மேற்கு , மேற்கு, தெற்கு – படுக்கையறை

வடமேற்கு – கழிவறை

வடக்கு – குபேரனுடைய திசை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்

வடகிழக்கு – குடிநீர் ஆதாரம் அமைக்கலாம்

வட கிழக்கு, கிழக்கு, மேற்கு – பூஜை அறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில், நல்ல பலன்கள் தரும் எண்களை கொண்டு வீடு மற்றும் அதன் அறைகளின் அகல நீளத்தை அமைப்பது சாலச்சிறந்தது.


பொதுவாக 6 அடிக்கு கீழ் கழிவறையை தவிர மற்ற அறைகள் இருக்க கூடாது என்பது மனையடி சாஸ்திர விதியாகும். அதே போல மேலே கூற பட்டுள்ள மனையடி சாஸ்திரம் அட்டவணை என்பது ஒரு அறையின் உள்ளடக்கமே ஆகும். சுவரின் அளவு இதில் சேராது. மொத்த வீட்டின் அளவில் சுவரின் அளவு சேர்ந்துவிடும். மேலே கூறப்பட்டுள்ள அளவுகளில் நன்மை தரக்கூடிய எண்ணிக்கையில் வீட்டின் அகலமும் நீளமும் அதே போல அறைகளின் அகலமும் நீளமும் இருப்பது நல்லது.

உதாரணமாக ஒரு அறையின் உள்ளளவு 10 அடி நீளம் 6 அடி அகலம் என்றால் அது நல்ல அளவு.

ஆனால் 10 அடி நீளம் 7 அடி அகலம் என்றால் அது தீய பலன் தர கூடியதாக இருக்கும். ஏன் என்றால் 7 அடியில் அகலமோ நீளமோ இருந்தால் தரித்திரம் உண்டாகும் என்று கூறுகிறது மனையடி சாஸ்திரம்.

அகல நீள அட்டவணைப்படி 6, 8, 10, 11,16, 17, 20, 21, 22, 26, 27, 28, 29, 30, 32, 33, 35, 36, 37, 39, 41, 42, 45, 50, 52, 54, 56, 59, 60, 64, 66, 68, 71, 72, 73, 75, 77, 79, 80, 84, 85, 88, 89, 90, 91, 92, 95, 97, 99, 100 ஆகிய அடிகளில் வீட்டின் அறைகளையும் வீட்டையும் அமைக்கலாம்.

ஆனால் இதிலும் யோகம் தரக்கூடிய சில அளவு முறைகள் உள்ளன. அவை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

மனையடி சாஸ்திரம் அளவு படி யோகம் தரக்கூடிய அளவுகள்

6 அடி அகலமும் 8 அடி நீளமும்,

8 அடி அகலமும் 10 அடி நீளமும்,

10 அடி அகலமும் 16 அடி நீளமும்,

16 அடி அகலமும் 21 அடி நீளமும்,

21 அடி அகலமும் 30 அடி நீளமும்,

30 அடி அகலமும் 37 அடி நீளமும்,

37 அடி அகலமும் 50 அடி நீளமும்,

39 அடி அகலமும் 59 அடி நீளமும்,

42 அடி அகலமும் 59 அடி நீளமும்,

50 அடி அகலமும் 73 அடி நீளமும்,

60 அடி அகலமும் 80 அடி நீளமும் வீட்டின் அளவாகவோ அல்லது அறையின் உள்ளளவாகவோ இருப்பது யோக அளவாகும்.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 April 2024 8:53 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  தமிழக கிராம உணவின் சிறப்புகள்
 2. குமாரபாளையம்
  மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
 5. லைஃப்ஸ்டைல்
  இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
 6. இந்தியா
  5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
 7. கடையநல்லூர்
  கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
 8. லைஃப்ஸ்டைல்
  கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
 9. லைஃப்ஸ்டைல்
  இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
 10. தென்காசி
  கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி