வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு : சென்னையில் சோகம்

வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து  தீக்குளித்தவர்  உயிரிழப்பு : சென்னையில் சோகம்
X
இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் வீடுகளை இடிக்க உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி வீடுகளை இடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். நோட்டீசை மக்கள் வாங்க மறுத்தனர். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அப்பகுதி மக்கள் மனுக்களை அனுப்பினர்.

இந்நிலையில் காவல்துறை பாதுகாப்புடன், நேற்று வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்றது.

வீடுகளை பொதுப்பணித்துறையினர் இடித்தபோது அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அப்பகுதியை சேர்ந்த கண்ணையா என்ற 60 வயது முதியவர் ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வி.ஜி.கண்ணையன், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story