மஹா சிவராத்திரி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

மஹா சிவராத்திரி: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி
X

மீனாட்சி அம்மன் கோவில் (பைல் படம்)

மீனாட்சி அம்மன் கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி அளித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மஹா சிவராத்திரி உற்சவத்திற்காக வரும் 18-ம் தேதி இரவு முதல் கோயில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை 19.02.2023-ம் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது. மேலும் அம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளது.

இதில், பொதுமக்களும், சேவார்த்திகளும், பக்தப் பெருமக்களும், அபிஷேகப் பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை 18-ம் தேதி மாலைக்குள் கோயில் நிர்வாகத்தில் வழங்கலாம்.

அதேபோல, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயில்களில் மகாசிவாராத்திரி உற்சவத்திற்கு அபிஷேக பொருட்கள் வழங்கலாம் எனவும், சிவராத்தி அன்று பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா