மதுரை மாநகரப் பேருந்தில் இலவச பயணம் - மகிழ்ச்சியுடன் மகளிர்
X
By - Needhirajan, Reporter |8 May 2021 5:45 PM IST
இலவச பயண அனுமதி என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுரை மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்
தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது அடுத்து தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த ஐந்து முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். அதில் ஒன்றாக மாநகரங்களில் உள்ள சாதாரண பேருந்துகளில் மகளிர் அனைவரும் இலவச பயணம் செய்யலாம் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அந்த திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருகிறது. இதனை அடுத்து மதுரை மாநகர பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி இலவசமாக பெண்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அனுமதி அளிக்கப்பட்ட பேருந்துகளில் மகளிர் இலவச பயண அனுமதி என்ற ஸ்டிக்கர் பேருந்தின் முன்புறம் ஒட்டப்பட்டு உள்ளது
இந்தத் திட்டத்தை வரவேற்ற பெண்கள் தமிழக முதல்வருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu