2025 பொங்கலுக்கு அலங்காநல்லூரில் மகளிர் ஜல்லிக்கட்டு
தைத்திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடததப்பட்டு வருகிறது. இதுவரை ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும். காளைகளை அடக்கி வெற்றி பெற்று காளையர்கள் பரிசுகளை குவித்து வந்தனர். இந்நிலையில் பெண்களும் கலந்து கொள்ளும் ஜல்லிக்கட்டு போட்டியை வெகு விமர்சையாக நடத்த சுற்றுலா நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகளும் திட்டமிட்டிருந்தன.
இந்நிலையில் சுற்றுலா நிறுவன உரிமையாளரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான வி. கே. டி. பாலன் கூறுகையில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவடைந்த பின்பு, அலங்காநல்லூர் அருகேயுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பெறும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். தொடக்கத்தில் மகளிர் பங்கேற்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி சாத்தியமில்லை என்று எதிர்த்தவர்களே, தற்போது ஆதரவு தரத் தொடங்கியுள்ளனர்.
மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க பெண் போலீஸார், கபடி வீராங்கனைகள், கல்லூரி மாணவிகள் ஆர்வமாக முன் வந்துள்ளனர். அவர்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்க உள்ளோம்.
முதல் மகளிர் ஜல்லிக்கட்டு என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்புக் கவச உடைகள் வழங்க உள்ளோம். அதற்கான வடிவமைப்புப் பணிகள் நடக்கின்றன.
மகளிர் ஜல்லிக்கட்டுப் போட்டியிலும் ஆண்களுக்கு வழங்குவது போல் கார், பைக் மற்றும் விலை உயர்ந்த பரிசுகளை வழங்க உள்ளோம். உயிருக்கு ஆபத்து, காயம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu