கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி

கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
X

மதுரையில் 3 தொகுதிகளுக்கு கூடுதல் வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் ஏற்கனவே கடந்த 8 ம் தேதி சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடந்த திங்களன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்வு செய்யப்பட்ட நிலையில் சோழவந்தான், திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 3 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 16ஐ தாண்டியுள்ளதால் அந்த 3 தொகுதிகளுக்கும் தேவையான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என்பதால் கூடுதலாக சோழவந்தான் - 366 இயந்திரங்களும், திருப்பரங்குன்றம் - 550 இயந்திரங்களும், திருமங்கலம் - 483 வாக்குபதிவு இயந்திரங்களும் சுழற்சி முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீலிடப்பட்ட அறையில் இருந்து வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!