வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரம்
X

நாளை தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மதுரையில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

10 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மதுரை மாவட்டத்தில் மொத்தம் 26 லட்சத்து 97 ஆயிரத்து 682 வாக்காளர்கள் உள்ளனர்.மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக உள்ள மதுரை கிழக்கு தொகுதியில் 3லட்சத்து 28 ஆயிரத்து 990 வாக்காளர்களும், குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியான சோழவந்தான் தொகுதியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 106 வாக்காளர்களும் உள்ளனர்.2716 வாக்கு பதிவு மையங்களில் 3856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.1330 பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் கூடுதலாக 1140 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.வாக்குபதிவு இயந்திரங்கள் மொத்தமாக வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்திலிருந்து அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்படுகிறது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு வாகனத்திலும் GPS கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!