மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ பிரசாரம்
மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புதூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது, தமிழகத்தில் தானே புயல், வர்தா புயல், கஜா புயல் உள்ளிட்ட பல்வேறு புயல்கள் வந்து லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் மத்திய அரசிடம் தமிழக அரசு ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 474 கோடி ரூபாய் நிவாரண நிதியாக கேட்கப்பட்டது ஆனால் மோடி அரசு 6 ஆயிரத்து 434 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியது.
கேட்டதில் 4 சதவீதம் மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்த அரசு தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் காவு கொடுத்து விட்டது. வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் இளம்பெண்கள் முடிவெடுக்க வேண்டும். நீங்கள்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். திமுக அரசு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும்
இந்த அரசால் எந்த திட்டங்களையும் கொண்டு வர முடியாது துணை முதல்வர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என கவர்னரிடம் ஸ்டாலின் ஊழல் புகார் கொடுத்தார் மற்ற அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டது. இதனால்தான் அவர்கள் மத்திய அரசின் காலடியில் புழுப்போல் கிடக்கிறார்கள் இவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டத்தையும் பெறமுடியாது .
இவர்கள் எதிர்த்து ஓட்டு போட்டதால் தான் வேளாண் சட்டத்திற்கு எதிராக ஓட்டு போட முடியாமல் போனது அதேபோல குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர் இவர்களும் பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்த்து ஓட்டு போட்டு இருந்தால் அந்த சட்டம் செல்லாமல் போயிருக்கும் இவ்வாறு அவர் பேசினார்.க
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu