மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: முதல்வர் ஸ்டாலின் காணொளிக்காட்சி பொதுக்கூட்டம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்: முதல்வர் ஸ்டாலின் காணொளிக்காட்சி பொதுக்கூட்டம்
X

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பேரையூரில் நடந்த முதல்வர் மு .க .ஸ்டாலின் மொழிப்போர் தியாகி வீரவணக்கம் செலுத்தும் காணொலி காட்சி பொதுக்கூட்டம்

திருமங்கலம் தொகுதியில் மொழிப்போர் தியாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வீரவணக்கம் செலுத்திய காணொளிகாட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பேரையூர் தாலுகாவில் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் காணொலி காட்சி மூலம் திமுக தொண்டர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.

விழாவை மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டி முருகன் மற்றும் துணை அமைப்பாளர் ஆர்.எம். நாகலிங்கம் மற்றும் கலாநிதி ஆகியோர் முன்னின்று நடத்தினர் .இவ்விழாவில் திமுகவின் முக்கிய மாநில மாவட்ட நிர்வாகிகள், மாணவர் அணியினர் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இவ்விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மதுரை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் செய்தனர்.

Tags

Next Story