பாலியல் குற்றங்கள் : காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, அத்திபட்டி கிராமத்தில் உள்ள ராமையா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, அத்திபட்டி கிராமத்தில் உள்ள ராமையா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட அத்திபட்டி கிராமத்தில் உள்ள ராமையா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரையூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரோஜா தலைமையில் மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்தும் அவற்றினை தடுப்பதற்கான வழிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
பெண்கல்வி குறித்தும், சமுதாயத்தில் பெண் குழந்தைகளின் பங்கு குறித்தும், பெண்கள் பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்றும் அதற்கான முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடினார்கள்.இந்த விழிப்புணர்வு முகாமில் பள்ளியைச் சேர்ந்த 400 மாணவிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் காவல்துறையின் சார்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியில் மாணவ மாணவர்கள் பள்ளிகளில் நடக்கும் பாலியல் அத்து மீறல்கள் குறித்தும், பள்ளிக்கு வெளியிலும் பள்ளி செல்லும் வழியில் ஏதேனும் தவறுகள் ஏற்படும். அவற்றினை இந்தப் புகார் பெட்டியில் புகாராக எழுதி வைக்கலாம். ஒவ்வொரு வாரமும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மேற்படி புகார் பெட்டியில் வைக்கப்படும் புகார்களைப் பெற்று அவற்றை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்
மேலும் இப்புகார் பெட்டியில் வைக்கப்படும் புகார்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். இப்புகார் பெட்டியில் பள்ளி கல்லூரிகளின் அருகில் புகையிலை பொருட்கள் போதைப் பொருட்கள் பள்ளி மாணவிகளுக்கு விற்பது குறித்து தகவல் தெரிவிக்கலாம் என்றார் அவர்..
மதுரை மாவட்டத்தில் இணையவழி குற்றங்களிலிருந்து மாணவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணி மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் சார்மிங் ஒஸ்லின் தலைமையிலான குழு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu