உசிலம்பட்டி அருகே 100 அடி கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே 100 அடி கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு
X

கிணற்றில் விழுந்தவரை மீட்கும் பணி நடைபெற்றது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜக்காபட்டி கிராமத்தில் நூறு அடி கிணற்றில் விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள ஏழுமலை சாலை, ராஜக்காபட்டி கிராமத்தில் பெருமாள்சாமி கோவிலுக்கு சொந்தமான பழமையான 100 அடி ஆழமுளள கிணறு உள்ளது. அவ்வழியாக சென்ற தங்கப்பாண்டி வயது 40 எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், நிலை அலுவலர் தங்கம் தலைமையில், கிணற்றில் விழுந்த தங்கபாண்டியை மீட்டபோது பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து எழுமலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!