மதுரை புறநகர்: போலீஸார் தீவிர சோதனை

மதுரை புறநகர்: போலீஸார் தீவிர சோதனை
X

மதுரையில் முழூ ஊரடங்கையொட்டி, போலீஸார் சோதனையை கடுமையாக்கியுள்ளதாலும், இரு சக்கர வாகனங்களில் வருவோரை தடுத்தி நிறுத்தி விசாரிப்பதாலும், மதுரை அண்ணாநகரில் மின்னணு வணிகம் செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உணவுப் பொருட்களை சைக்கிளில் சென்று வழங்கி வருகின்றனர்.

மதுரை புறநகர் பகுதிகளான, கருப்பாயூரணி, ஒத்தப்பட்டி, காளிகாப்பான், அம்மாபட்டி, திருமொகூர் ஆகிய பகுதிகளில் மதுரை மாவட்ட போலீஸ் எஸ்பி சுஜித்குமார் தலைமையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டதால், சாலைகள் பல வெறிச்சோடி காணப்பட்டன.

அவசியம் என செல்வோரின் அடையாள அட்டைகளையும் போலீஸார் வாங்கி பார்த்து அனுப்பினர்.




Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!